Thursday, March 10, 2011

யோகக் கலை

யோகக் கலை

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். குறிப்பாக மூச்சுப் பயிற்சி, ஆசனப் பயிற்சி, தியானம், உளக் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு மூலமாக தனிமனித மேம்பாட்டை யோகக் கலை உந்துவிக்கிறது. யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். தமிழில் "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்தல்" என்று பொருள் கூறப்படுகின்றன. "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

No comments:

Post a Comment